Entertainment
முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்: ரூ.100 கோடி கன்பர்ம் என தகவல்!
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதுவரை இல்லாத அளவில் தனுஷின் திரைப்படம் முதல் நாளில் இருந்து 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இந்த படம் 10.39 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக வினியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 24 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன . மேலும் இந்த படம் விரைவில் ரூ.100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் விஜய் படங்களுக்கு இணையாக தனுஷின் படம் முதல் முதலாக வசூல் செய்திருப்பது அடுத்து மாஸ் நடிகர்களின் பட்டியலில் தனுஷூம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வடசென்னை, அசுரன், பட்டாசு போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த தனுஷ் தற்போது கர்ணன் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருடைய சம்பளம் இரு மடங்காக கோலிவுட்டில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
