நெல்லை கல்குவாரி விபத்து; காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்!!

நெல்லை மாவட்டம் பாளையம் கோட்டை தாலுக்கா பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல் குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்.

இந்நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே மீட்பு பணி தொய்வாக நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் கல்குவாரி விபத்து வேதனை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழு அங்கு சென்று மீட்பு மீட்பு பணி துரிதபடுத்த வேண்டும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தமிழக முதல்வர் அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment