வெப்தொடர் தயாரிக்கும் படக்குழுவினர்களின் நாக்கை அறுத்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என பகிரங்க அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாலிவுட்டின் பிரபல நடிகர் சயீப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் தொடர் ’தாண்டவ்’. இந்த தொடரை அலி அப்பாஸ் என்பவர் இயக்கி உள்ளார் இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளிவந்த போது இந்துமத கடவுளை இந்த தொடர் அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்தன.,
இதனையடுத்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகர் சயிப் அலிகான் உள்பட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தத் தொடரை தயாரித்து கொண்டிருக்கும் படக்குழுவினர்களின் நாக்கை அறுத்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என கரணி சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவிப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வெப்தொடர் படக்குழுவினர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள இந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.