டிசம்பரில் ரூ.1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: ஒன்றிய அரசு தகவல்!!

இந்தியாவில் வரி வருவாயை பொறுத்தவரையில் 2022-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சிறந்த ஆண்டாகவே இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நேரடி வருவாய் ஆனது 26% அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி சுமார் ரூ.1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இத்தகைய வசூல் முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் கூடுதல் வரி கிடைத்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு ஸ்பெஷல்! 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி… அலைமோதிய கூட்டன்!!

இதனிடையே கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி, சிஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.78,434 கோடி வசூல் கிடைத்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் கடந்த நவம்பர் மாத வசூல் சுமார் ரூ.1.46 லட்சம் கோடி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதத்திற்காக ஜிஎஸ்டி வசூலை ஒப்பிடும் போது 15 சதவீதம் அதிகமாகும். அதாவது ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.