அடி தூள்..! வசூலில் புதிய சாதனையை படைத்த RRR… இதுவரையில் எத்தனை கோடி தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இவர்கள் இணைந்து நடித்துள்ள படம்தான் ஆர் ஆர் ஆர். இப்படத்தினை இயக்குனர் ராஜம்மெளலி இயக்கியுள்ளார்.
இப்படம் 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆலியாபட், அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி போன்ற நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
கடந்த மாதம் மார்ச் 25 தேதி வெளியான இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர் ஆர் ஆர் வெளியாகி தற்போது 10 நாட்கள் ஆன நிலையில் வசூலில் மட்டும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தற்போது ரூ. 850 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
