ஆர் ஆர் ஆர் படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு-ரசிகர்கள் அதிர்ச்சி

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள படங்கள் அனைத்தும் பிரமாண்ட படங்கள் என்று பெயர் வாங்கியவை. ராஜமவுலியின் பாகுபலி சீரிஸ் படங்களுக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் படங்களுக்கு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜமவுலி தெலுங்கு மட்டுமல்லாது தென்னக மொழிகள் அனைத்திலும் ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியுள்ளார். ஜூனியர் என் டி. ஆர் , ராம்சரண் தேஜா இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 7ல் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரொனாவின் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாக கூறப்படும் இச்சூழலில் பட ரிலீசை சற்று தள்ளி வைத்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment