Connect with us

அம்மாடியோவ்!! ஆயிரம் கோடியைக் கடந்த ‘ஆர்ஆர்ஆர்’… ஒட்டுமொத்த கலெக்‌ஷன் இவ்வளவா?

ஆர்ஆர்ஆர்

பொழுதுபோக்கு

அம்மாடியோவ்!! ஆயிரம் கோடியைக் கடந்த ‘ஆர்ஆர்ஆர்’… ஒட்டுமொத்த கலெக்‌ஷன் இவ்வளவா?

அம்மாடியோவ்!! ஆயிரம் கோடியைக் கடந்த ‘ஆர்ஆர்ஆர்’… ஒட்டுமொத்த கலெக்‌ஷன் இவ்வளவா?

‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே வெளியான திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ சுருக்கமாக ‘ஆர்ஆர்ஆர்’.

இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டது.

கடந்த வார நிலவரப்படி ‘ஆர்ஆர்ஆர்’ ஆயிரம் கோடியைக் கடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதையும் கடந்து மாஸ் சாதனை படைத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி ‘ஆர்ஆர்ஆர்’ உலக அளவில் 1100 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது. திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் ஆன நிலையில், இதுவரையிலும் பல தியேட்டர்களில் படம் சக்ஸஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைத்து நடித்த திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top