ஹைதராபாத் மாதிரியே ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் சாதனை செய்ய ஆர்சிபிக்கு கிடைச்ச பொன்னான வாய்ப்பு..

கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குவாலிஃபயர் முதல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த நிலையில், அவர்களுக்கிடையேயான குவாலிஃபயர் 1 போட்டியின் ஆரம்பமே சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மாட்டார்கள் என்ற ஒரு அணிதான் தற்போது அதற்கு முன்னேற்றம் கண்டு அனைவரையும் அசர வைத்துள்ளது. பாஃப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி, கடந்து சில சீசன்களில் சிறப்பாக ஆடினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றை கடப்பதே கடினமாக இருந்து வந்தது.

அதே போல தான் இந்த சீசனின் ஆரம்பத்திலும் ஆர்சிபி அணிக்கு அமைந்திருந்த நிலையில் முதல் 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்த முறையும் வழக்கம் போல ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறி அந்த அணியின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சீசனில் ஏமாற்றத்தை கொடுக்கப் போகிறது என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர்.

ஆனால் லீக் சுற்றில் தங்கள் கடைசி ஆறு போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பெங்களூர் அணி தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் மிக அபாரமாக வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக, சுமார் 10 நாட்களுக்கு முன் ஆர்சிபி கடைசி இடத்தில் இருந்த போது முதலிடத்தில் இருந்த அணி தான் ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த இரண்டு அணிகள் பிளே ஆப் போட்டியில் மோதும் சூழலில், இதன் மூலமே ஆர்சிபி அணியின் கம்பேக்கை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் தான் இந்த சீசனில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் காத்திருக்கும் பொன்னான வாய்ப்பை பற்றி தற்போது பார்க்கலாம். எலிமினேட்டர் போட்டியில் தகுதி பெற்றால், நாக் அவுட் போல தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டி வரும். தொடர்ந்து வெற்றி பெறும் அணி, குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோதி வெற்றி பெற்று தான் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

இதனால், ஆர்சிபி அல்லது ராஜஸ்தான் அணிகளில் ஒன்று வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் ஐபிஎல் கோப்பையை உறுதி செய்து விடலாம். அப்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, கடந்த 2016 ஆம் ஆண்டு, எலிமினேட்டர், குவாலிபயர் 2 ஆகிய போட்டிகளில் வென்று ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி இருந்தது.

அப்படி ஒரு வாய்ப்பு, ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு கிடைத்துள்ளதால், இந்த சீசனில் அப்படி ஒரு அற்புதம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...