வெற்றியை நெருங்கி கோட்டை விட்ட பஞ்சாப்.. சிராஜ் எடுத்த 4 விக்கெட்டுகள்..!

இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கிய நிலையில் துரதிஷ்டவசமாக கோட்டை விட்டதால் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரின் 28 வது போட்டி இன்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் நான்கு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

விராட் கோலி 59 ரன்கள், டுபிளெஸ்ஸிஸ்  84 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் சரியாக விளையாடாததால் அந்த தொடக்கத்தை இந்த அணியினர் சரியாக பயன்படுத்தவில்லை.

rcb pbksஇந்த நிலையில் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் இரண்டாவது பந்திலேயே அதர்வா அவுட் ஆகி விட அதற்கு அடுத்து மூன்றாவது ஓவரில் நான்காவது ஓவரில் ஆறாவது ஓவரில் பத்தாவது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இருப்பினும் பஞ்சாப் அணியின் வெற்றிக்காக ஜிதேஷ் தனியாக போராடினார். அவர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்ததை அடுத்து பஞ்சாப் அணி தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணி 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் டி20 போட்டியை பொறுத்தவரை இது சாத்தியம்தான் என்று கூறப்பட்டது. ஆனால் 18 வது ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும் 19வது ஓவரில் ஒரு விக்கெட் இழந்ததை   அடுத்து பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் பெங்களூர் அணி ஆறு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் அணி நான்கு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், லக்னோ, சென்னை ஆகிய அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.