பாலிவுட்டில் நடிக்க ஆசை தான்…. ஆனால் கண்டிஷன் போடும் ரெளடி பேபி…..!

தமிழ் பெண்ணாக இருந்து பிற மொழி சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் சாய் பல்லவியோ மிக சுலபமாக அதை செய்துவிட்டார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தான் அவர் முயற்சி செய்தார் ஆனால் இங்கு அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

 சாய் பல்லவி

அந்த வகையில் மலையாளத்தில் அவர் அறிமுகமான முதல் படமே அமோக வரவேற்பை பெற்றது. எந்தவித மேக்கப்பும் இல்லாமல் தனது இயற்கை அழகாலே ரசிகர்களை வசீகரம் செய்த சாய்பல்லவிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் டாப் நடிகையாக வளர்ந்தார்.

முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டிய சாய்பல்லவி தற்போது தெலுங்கில் டாப் நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யா உடன் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த லவ் ஸ்டோரி படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

அதேபோல் தற்போது சாய் பல்லவி நானியுடன் இணைந்து நடித்துள்ள ஷ்யாம் சிங்க ராய் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகர் நானியுடன் இணைந்து சாய்பல்லவி பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அந்த பேட்டியில் சாய் பல்லவி கூறியதாவது, “பாலிவுட் படத்தில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் ஸ்க்ரிப்ட்டும் கதையும் ரொம்ப முக்கியம். அது நன்றாக இருந்தால் மட்டுமே நான் அந்த படத்தில் நடிப்பேன்” என கூறியுள்ளார். எனவே நிச்சயம் அவர் எதிர்பார்ப்பது போன்ற ஒரு கதை அமையும் விரைவில் சாய்பல்லவியை பாலிவுட்டில் பார்க்கலாம் என ரசிகர்கள் தற்போதே கனவு காண தொடங்கி விட்டார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment