தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் உருவான ’மாரி 2’ திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்ற போதிலும் அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் உலக அளவில் பிரபலம் ஆனது என்பதும் இந்த பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்ற தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த பாடலை பிரபு தேவா நடன அமைப்பு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் தமிழகத்தின் ஒவ்வொரு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே யூடியூப்பில் சாதனை செய்த ரவுடி பேபி பாடல் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. ரவுடி பேபி பாடல் யூ டியூபில் 5 மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
தென்னிந்தியாவில் ஐந்து மில்லியன் லைக்ஸ் பெற்ற முதல் பாடல் இதுதான் என்பதும் அந்த பெருமை தனுஷ் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.