கைது செய்யப்பட்ட ரவுடிக்கு கால் எலும்பு முறிவு !! பின்னணி என்ன?
சேலத்தில் ஆள்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி தப்பியோடியபோது கால் எழும்பு முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளர் தெரியாத மர்மகும்பல் ஒன்று அவரை கடத்தி சென்றுள்ளது.
பின்னர் அவரது குடும்பத்தாரை மிரட்டி 1 லட்சம் ரூபாய் பணம் பறித்த பிறகு அன்பழகனை விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடிகளான சித்தேஸ்வரன், அன்பழகன் ஆகியோர் கடத்தலில் ஈடுப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சித்தேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்யும் போது தப்பியோட முயற்ச்சி செய்துள்ளார். அப்போது தவறிக் கீழே விழுந்த சித்தேஸ்வரனின் கால் எலும்பு முறிந்ததால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
