ஜனவரி 3ஆம் தேதி முதல் இனி பள்ளிகள் கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்பு நடைபெறாது!: அரசாணை வெளியீடு;

நம் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சுழற்சி முறையில் மாணவர்களின் பாடங்கள் நடத்தப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி கற்றல் திறன் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனை சரிகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வுகள் நெருங்குவதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த முடியவில்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக நாம் ஜனவரி 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைபெறாது என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள்  இந்த சுழற்சி முறையில் நடைபெறாது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவை பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளிலும் சுழற்சிமுறை வகுப்புகள் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.  இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தொற்று காணப்படுவதால், மாணவர்களுக்கு கொரோனா  தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment