பாறை மீது உரசிய ரோப்கார்: பழனி கோயிலில் பரபரப்பு..!!!

பழனியில் பக்தர்களை ஏற்றிச்சென்ற ரோப்கார் பாறை மீது உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில். இந்த மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரோப் கார் கொண்ட வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் அதிக பாரம் காரணமாக ரோப் கார் ஒன்று பாறை மிது உரசியது.

கனமழை எதிரொலி: சுருளியில் குளிக்க தடை..!!

இதனால் ரோப் காரின் ஒரு பகுதி சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரோப்காரில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பாரத்தை சற்று குறைத்த பிறகு, மீண்டும் ரோப்கார் சேவையானது தொடங்கப்பட்டது. இத்தகை சம்பவத்தினால் பக்தர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment