சென்னையில் சோகம்! வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!

சென்னை புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் தீவிர மழை பெய்து வருகிறது.

ஆடையின்றி வீடியோ கால்.. மடாதிபதி
தற்கொலையில் திடீர் திருப்பம்!!

இந்நிலையில் புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலணி பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சாந்தி (வயது 45) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டின் முன் கோலம்போடுவதற்காக வந்தப்போது ஸ்லாப் திடீரென இடிந்து அவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment