இந்தியா மட்டும் உலக கோப்பை ஜெயிச்சா.. ரோஹித்திற்கு சேரப்போகும் பெருமை.. யாருக்கும் அமையாத பாக்கியம்..

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான ஒரு தருணத்திற்காக தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பை வெல்வதற்கான சூப்பர் வாய்ப்பு தற்போது ரோஹித் ஷர்மாவிற்கு அமைந்துள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தொடர்ச்சியாக கடந்த மூன்று ஐசிசி தொடர்களின் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை என இரண்டையும் தவறவிட்டிருந்த இந்திய அணி, இந்த முறை நிச்சயம் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதேபோல அவர்களை எதிர்த்து ஆடும் தென்னாபிரிக்க அணியும் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் முன்னேறி உள்ளதால் நிச்சயம் அதனை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பாக மாற்றுவதற்கான முயற்சியில் தான் அவர்களும் ஈடுபடுவார்கள். இந்திய அணி 7 போட்டிகளிலும், தென்னாபிரிக்க அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காமல் இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் நிச்சயம் இந்த போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால் அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸில் இறுதி போட்டி நடைபெற உள்ள பார்படாஸ் மைதானம் மழை காரணமாக பாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரை இறுதி போல இந்த போட்டியிலும் வானிலை மிக முக்கியமான விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி என வரும்போது மட்டும் ஏதாவது ஒரு காரணத்தில் சொதப்பி கோப்பையையும் தவற விடுகின்றனர். அப்படி எந்த தவறுகளும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் இருப்பதால் நிச்சயம் அவர் தனது பணியை சிறப்பாக செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நடைபெறும் பட்சத்தில் தோனிக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோஹித்திற்கு வந்து சேரலாம். ஆனால் அதே வேளையில், ரோஹித் இந்த முறை கோப்பைகளை இழந்தால் அவரை விமர்சனம் செய்வதற்கும், ஏச்சுகள் சொல்வதற்கும் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் நிச்சயம் கண்டுகொள்ளாமல் தனது ஆட்டத்தை மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்தி இந்திய அணியை நன்றாக தலைமை தாங்கி கோப்பை வெல்வதில் மட்டும் தான் ரோஹித் மும்முரம் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை இறுதி போட்டியில் வீழ்த்தினால் ரோஹித்திற்கு கிடைக்கப் போகும் பெருமை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம்பிடித்திருந்த ரோஹித் ஷர்மா, தற்போது வரை தொடர்ந்து 9 டி20 உலக கோப்பைத் தொடர்களில் ஆடியுள்ளார். மேலும் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்றால் ரோஹித்திற்கு சிறப்பான பெருமையும் கிடைக்கும்.

அதாவது, டி20 உலக கோப்பையை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெயர் தான் அது. இதனால், நிச்சயம் தனது அணியை அசத்தலாக வழிநடத்தி அதற்கான முயற்சிகளில் ரோஹித் இறங்குவார் என்றே தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...