சென்னையை உலுக்கிய பரங்கிமலை வழக்கு: குண்டர் சட்டம் உறுதியானது!!

கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த சத்திய பிரியா என்ற மாணவியை சதீஷ் என்பவர் ரயில் முன் தள்ளி கொலை செய்தார்.

இந்நிலையில் மகளின் மரணத்தை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் குற்றவாளியான சதீஷை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு: இபிஎஸ்-க்கு அழைப்பு..!!

அதே சமயம் சதீஷ் குமார் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் குண்டர் சட்டம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? குற்றவாளிக்கு ஏற்ற தண்டனையா? என்பதை உறுதி செய்ய விசாரணை நடைப்பெற்று வந்தது.

இருப்பினும் என் மீது அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியபட்டுள்ளதாகவும், இத்தகைய செயல் இயற்கை நீதிக்கு முரணாணது என சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!

அப்போது வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழக அரசு உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் குற்றவாளி சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை அறிவுறை கழகம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.