Connect with us

வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் கொள்ளை!! வியாபாரியை கையும் களவுமாக பிடித்த அக்கம்பக்கத்தினர்

thief

தமிழகம்

நம் தமிழகத்தில் தற்போது அதிக அளவு கொள்ளை சம்பவங்கள் காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தங்க நகைகளின் திருட்டு நம் தமிழகத்தில் அதிகளவு தினந்தோறும் நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். இன்று குழந்தை என்றும் பாராமல் நகை பறிப்பு சம்பவம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நகை பறிப்பு சம்பவத்தில் வியாபாரி ஒருவர் ஈடுபட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி சென்னை வடபழனியில் குழந்தையிடம் இருந்து சுமார் அரை சவரன் நகையை கோலமாவு வியாபாரி ஒருவர் பறித்துள்ளார்.

இந்த கோலமாவு வியாபாரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையிடம் நகையை பறித்துள்ளார். கோலமாவு வியாபாரி மரியனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வடபழனி போலீசார் மரியனிடம் தீவிர விசாரணை செய்துகொண்டு வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top