சென்னை அரும்பாக்கம் அடுத்த தனியார் வங்கியில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது
நம் தமிழகத்தின் வங்கிகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருக்கும் போது அங்கு பணியாற்றிய ஊளியர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அங்கு பணியாளர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 15 முதல் 50 சவரன் வரையில் கொள்ளைப்போனதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே பணியாற்றிய வங்கி மேலாளர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு வங்கி கொள்ளை தொடர்பாக முருகன் என்பவரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.