Connect with us

குஜராத்தில் ‘ரோடு ஷோ’…! தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி வருகை! பொதுமக்கள் வாழ்த்து மழை!!

road show

News

குஜராத்தில் ‘ரோடு ஷோ’…! தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி வருகை! பொதுமக்கள் வாழ்த்து மழை!!

குஜராத்தில் ‘ரோடு ஷோ’…! தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி வருகை! பொதுமக்கள் வாழ்த்து மழை!!

நேற்றைய தினம் இந்தியாவின் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜகவும், ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜகவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின்பு குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ  நிகழ்த்துவதாக தகவல் கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நிகழ்த்துகிறார்.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

சாலையில் இருமருங்கிலும் திரண்டுள்ள பொதுமக்கள், தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மலர் தூவியும் கரவொலி எழுப்பியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து குஜராத் பாஜக தலைமை அலுவலகம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடியின் பயணம் செய்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top