அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவர் பெயரில் சாலை!

திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு சாலை உருவாகியுள்ளது தமிழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலகட்டத்த்தில் வாழ்ந்தவர் வள்ளுவர். இவர் உலக மக்களை நல்வழிப்படுத்த எழுதிய நூல்தான் திருக்குறள்.

இரண்டே அடியில் உருவாக்கப்பட்ட திருக்குறள் மதம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து நிற்கும் அற்புத நூலாகம்.

அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சிறப்புப் பெயராக அழைக்கின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட திருக்குறள் இன்று உலகின் ஆகச் சிறந்த நூல்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1330 குறள்களை 133 பாக்களுக்குள் அடங்கி இருப்பார், ஒவ்வொரு பாவிலும் பத்துக் குறள்கள் உள்ளது. திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் 133 அடியில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பல நாடுகளில் திருவள்ளுவரின் பெயரில் சாலைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள சாலைக்கு வள்ளுவர் தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment