
தமிழகம்
கரூரில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!!
கரூர் அருகே பேருந்து நிழற்கூடை அகற்றியது தொடர்பாக போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி பிரமுகர்கள் அட்ரா சிட்டியில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டம் வடக்கு பாளையம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் பேருந்து நிழற்கூடம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேருந்து நிழற்கூடை இருக்கும் இடத்திற்கு பின்னால் திமுக பிரமுகரின் வீடு இருப்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக இடித்து அகற்றிய தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் நிழற்கூடையை எவ்வாறு அகற்றலாம் என தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அங்கு இருக்கும் வட்டாட்சியர் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
