சாலையை காணவில்லை! திருவாரூரில் பரபரப்பு புகார்..!!

திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரையில் அனைத்து சாலை வசதிகளும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் புதுப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரக்கட்டளை- திருப்பத்தூர் ஆற்றுப்பாலம் இடையே உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் உருவாகுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் உடனடியாக சாலையை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைத்து வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய கேபிள் பாலம் விபத்து: CCTV காட்சிகள் வெளியீடு!!

இந்நிலையில் வார்டு உறுப்பினர் ஒருவர் முதல்வர் தனி பிரிவிற்கு இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லையென்றும், உடனடியாக சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

அப்போது கடந்த 2021 ஆண்டு உலக வங்கி நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையினால் தார் சாலை அமைத்து தரப்பட்டதாக பதில் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியரிடன் கேட்டப்போது வருவாய் கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment