குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் உயிரிழப்பு!!

வடமாநிலங்களை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் அகமதாபாத்தில் மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 45-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து மூலம் தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பு; மேலும் ஒருமாதம் நீட்டிப்பு!!

இந்த சூழலில் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

அப்போது காரில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அதே போல் பேருந்தில் இருந்த 28 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிகிறது.

நாளை முதல் அமல்… ஒன்றிய அரசின் வட்டி விகிதம் உயர்வு!!

இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்து மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.