ஆர். கே. சுரேஷின் ‘காடுவெட்டி’ சமூக சீர்திருத்தப் படமா…? என்ன சொல்கிறார்கள் மக்கள்… ரிவ்யூ இதோ…

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிய திரைப்படம் ‘காடுவெட்டி’. மார்ச் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சள் ஸ்கீரீன்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

பா. ம. க கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த, மறைந்த காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்து காதல் நகரத்து காதல் என இரண்டாக பிரித்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளை கதாநாயகன் எப்படி கையாளுகிறார் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சங்கத் தலைவராக இருக்கிறார். இப்படத்தில் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியதாய் இருந்தது. கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.

‘காடுவெட்டி’ படத்தைப் பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது கண்டிப்பாக குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம். காடுவெட்டி என்பது பெயர் மட்டும் தான். எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக பெண்கள், பெண் பிள்ளைகள் தைரியமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டியுள்ளார்கள். காதலால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை காட்டியுள்ளார்கள். இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இப்படத்தை பார்க்க வேண்டும்.

ஆர். கே. சுரேஷின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது. சென்டிமெண்டான காட்சிகளில் அவரது நடிப்பால் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிட்டார். ஆக்க்ஷன் காட்சிகளிலும் ஆர். கே. சுரேஷ் அசத்தியிருக்கிறார். தற்போது வரை வில்லனாக நடித்து வந்த ஆர். கே. சுரேஷிற்கு நடிகனாக இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறார். இந்த ‘காடுவெட்டி’ திரைப்படம் ஆர். கே. சுரேஷ் அவர்களுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.