குஜராத் தேர்தல்: ஜடேஜாவின் மனைவி முன்னிலையா? பின்னடைவா?

குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது என்பதும் இதனை அடுத்து பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை ரிவாபா, வடக்கு ஜாம் நகர் என்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இன்று காலை வாக்கு எண்ணும்போது அவர் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

rivaba

அதன் பிறகு அவர் 2வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் தற்போது அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்து அவரது மாமனார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் என்பதும், காங்கிரஸ் வேட்பாளரை விட ரிவாபா சுமார் 35 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் ஆம்ஆத்மி மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில் ஒருசில ஊடகங்களில் ரிவாபா ஜடேஜா பின்னடைவில் இருப்பதாக கூறப்பட்டாலும் பல ஊடகங்களில் ரிவாபா ஜடேஜா முன்னிலையில் உள்ளார் என்றுதான் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.