ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி ; இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்!!

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளில் இருந்து 55 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் 180000 டன் எண்ணெய் அந்நாட்டு துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வழியாக அனுப்பியுள்ளன. அவை விரைவில் இந்தியாவை சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் உக்ரைன் மீதமுள்ள 370000 டன் எண்ணெய் இந்தியாவிற்கு அனுப்பமுடியாமல் சரக்கு குடாவுன்களிலும், துறைமுகங்களிலும் தேங்கி கிடக்கின்றனர்.

இதனால் அந்த எண்ணெய் இந்தியா வருவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளதால் இதன் காரணமாக இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்க்கு கட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே நுகர்வோர் பொருட்களின் விலை கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது. சோயா, பாமாயில் உள்ளட்ட எண்ணெய்களின் விலை கடந்த ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment