Connect with us

இன்று முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

tablets

செய்திகள்

இன்று முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

இன்று முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் மருந்துகளின் விலையும் அதிகரிக்கப்போவதாக இந்திய தேசிய மருந்து விலை ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அத்தியவசிய மருந்து பொருட்களின் விலை ஏப்ரல் 1- தேதி முதல்  முதல் 10.7 % உயர்த்தப்படும் என இந்திய தேசிய ஆணையம் நிர்ணயத்து இருந்தது. இதன்படி , வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் போற்ற 800 க்கும் மேற்பட்ட மருந்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய மருந்து பட்டியலிலுள்ள பாரசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்தசோகை மருந்துகள், ஸ்டீராய்டுகளின் மருந்துகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், இதயநோய், புற்றுநோய் ,நீரிழிவு நோய், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புக்களுக்கான மருந்துகளின் விலை 10.7 % அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் இதன் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top