இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஒன்றிய சுகாதார அமைப்புகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 1150 ஆக இருந்த நிலையில் நேற்று எண்ணிக்கை 2183 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 81.8% அதிகம்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 214 பேர் உயிரிழந்து விட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தலைநகர் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 517 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பாதிப்பை ஒப்பிடுகையில் இது 12% அதிகம்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.