பிரதமரானார் ரிஷி சுனக்: மன்னர் 3-ம் சார்லஸ் அறிவிப்பு!!

இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

குறிப்பாக அந்நாட்டில் நிலவி வரும் பொருளாதர நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில், தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் தேர்வாகி இருந்தார். இவருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் அடியெடுத்து வைத்துள்ளார்.

மேலும், மன்னர் 3ம் சார்லஸ் பிரதமராக ரிஷி சுனக்கை நியமித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment