கண்விழித்த ரிஷப் பண்ட் விபத்து குறித்து கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண் விழித்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது நான் தான் காரை ஓட்டிச் சென்றேன் என்றும் வாகனம் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக கண்ணசந்துவிட்டேன் என்றும் அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குப் பின்னர் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உடனடியாக வெளியே வந்ததாகவும் உள்ளே இருந்த டிரைவரையும் காப்பாற்றியதாகவும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் தலையில் காயம் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.