ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

சுக்கிரனின் பார்வையால் ரிஷப ராசிக்காரர்களின் பண பலம் மேம்பட்டு இருக்கும். சனி பகவான் மகரத்தில் வக்ரம் அடைந்து இருப்பதால் தொழில் ரீதியாக எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் பண ரீதியாக மேம்பட்டு காணப்படுவீர்கள்.

இதுநாள் வரை எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, புது வேலை, தொழில் அபிவிருத்தி என அனைத்துமே சிறப்பாக நடந்தேறும். இதுவரை இருந்த கடன்களை அடைப்பீர்கள். 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும்.

புதன் உச்சமடைவதால் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குப் பின் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

அம்மாவீட்டு உறவினர்கள் ரீதியாக உதவிகள் கிடைக்கப் பெறும். மேலும் நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த உறவினர்களை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

வெளிநாடுகளில் இருப்போர் சொந்த ஊருக்கு வந்து செல்வதற்கு ஆர்வம் காட்டுவர். சுக்கிரன் இடமாற்றம் மாணவர்களுக்கு கல்வி ரீதியாக சிறப்பான மாதமாக இருக்கும்.

உடல்ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினைகளும், மன ரீதியாக இருந்த பிரச்சினைகளும் சரியாகும் மாதமாக இருக்கும். வீடு, மனை வாங்க நினைத்திருந்தோருக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும் மாதமாகவே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews