ரிஷப் பண்ட்-ன் போராடிய சதம் வீணானது; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

உலகில் கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளுக்கு இந்தியாவை முன்னோடியாக அமைந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்திய அணியை பார்த்து பல நாட்டுப் விளையாட்டு வீரர்களும் பயப்படுவர். அந்த அளவிற்கு இந்தியா கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியையும் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியையும் கைப்பற்றியது.

இதனால் மீதமுள்ள கடைசி டெஸ்ட் போட்டி தொடரை வெல்லும் போட்டியாக காணப்பட்டது. நேற்றைய தினம் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட் நிதானமாக ஆடி சதமடித்தார். எனினும் இந்தியா அணி குறைவான இலக்கை சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்து இருந்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 3வது டெஸ்ட் போட்டியை வென்றது. 3வது டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரையும் தென்ஆப்பிரிக்கா அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா அணி.

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் 82 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் தட்சன் 40 ரன்களும், பவுமா 32 ரன்களும், எல்கர் 30 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க மண்ணில் சென்று இந்தியா வென்று வெற்றி வாகை சூடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சற்று ஏமாற்றமாக டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. எனிலும் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment