ரிஷபம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை ஆகச் சிறந்த நன்மைகள் மற்றும் மேன்மைகளைத் தரும் ஆண்டாக இருக்கும். வேலை எதுவும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். அதிலும் நீங்கள் எதிர்பார்த்த வெளியூர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கடன் தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும். உடல்நலன் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. எதிரிகள் படிப்படியாகக் குறைவர், தொழில் நிமித்தமாக அபிவிருத்தி மிகச் சிறப்பாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிரமம் நிறைந்ததாக இருக்கும்; தடங்கல்கள், பிரச்சினைகள், அலைச்சல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த வரன் கைகூடும்.

கணவன்- மனைவி இடையேயான உறவில் தொய்வு ஏற்படும், வீடு, வாகனம் வாங்குதல், வண்டி- வாகனம் வாங்குதல் என்பது போன்ற முதலீடுகளைத் தயங்காமல் செய்யலாம்.

உங்களின் முயற்சிக்கு ஏற்ப வெற்றிகள் வந்து சேரும், தொழில்ரீதியாக அளவுக்கு அதிகமான முதலீட்டைச் செய்யாமல் இருத்தல் நல்லது. பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், வீண் செலவுகளால் காசு கரையும்; அதனால் பணப் புழக்கம் இருக்கையில் உடனடி முதலீடு செய்தல் வேண்டும்.

வேலை செய்யும் இடங்களில் போட்டிகள் அதிகரிக்கும்; மேலும் பளுச்சுமை அதிகரித்துக் காணப்படும்; இருப்பினும் அதற்கேற்ப வெகுமானங்கள் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews