ரிஷபம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

ரிஷபம் சுபகிருது வருட பலன்கள்

விஸ்வாசம் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு பிரச்சினைகள் நீங்கி முழுமையான நன்மைகள் கிடைக்கும். கடந்த மாதம் ஏற்பட்ட ராகுபகவான் பெயர்ச்சியானது துவங்க இருந்த காரியங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

புதிய விஷயங்களில் ஈடுபடும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது, உங்களின் தன்னம்பிக்கை உங்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும். பண ரீதியாக பொருளாதாரம் மேம்படும். உடன் பிறந்தோர் ஆதரவு அதிக அளவில் கிடைக்கும்.

பெற்றோருக்கு இருந்த உடல் நலன் குறைவு சரியாகும், இதனால் மருத்துவ ரீதியான செலவுகள் குறையும். பெற்றோரின் ஆயுள் அதிகரிக்கும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் புதிதாக வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

குல தெய்வத்தின் ஆசிர்வாதம் அதிகம் உள்ள வருடமாக இருக்கும், குழந்தைகளின் படிப்பில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால கடன் தீரும் வாய்ப்புண்டு, நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

கணவன்- மனைவி இடையேயான நீண்டகால பிரச்சினைகள் சரியாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரம் பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கல்வி, வேலைவாய்ப்பு ரீதியாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஊதிய உயர்வு மற்றும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமானது கிடைக்கும்.

புதியதாக தொழில் துவங்கினால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், அதுபோக தொழிலை அபிவிருத்தி செய்தாலும் மிகச் சிறப்பான லாபத்தினைப் பெறுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.