ரிஷபம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள ரிஷபம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழும். சிலருக்கு வேலை, கல்வி சம்மந்தமாக இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இதுவரை அஷ்டமத்தில் இருக்கும் சனியால் எண்ணற்ற கஷ்டங்கள், துன்பங்களை கடந்து வந்தீர்கள். சனி வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுவதால் எதிலும் தீர யோசித்து செயல்பட வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நலம் தரும். நினைப்பது ஒன்று, நடைபெறுவது வேறு என்று இருக்கக்கூடும்.

குருவின் வீட்டில் சனி இருப்பதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. உங்களுக்கு வாழ்க்கை பாடத்தைக் கற்று கொடுக்கவே அவ்வாறு சோதனைகளும், தாமதங்களும் ஏற்படுகின்றது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கு 7, 12-ம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் செப்டம்பர் 6-ம் தேதி வக்ர நிவர்த்தியாவதால் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்படுகின்ற செலவுகளை சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து  வேறுபாடு அகலும். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பினை இழக்க நேரிடும் என்பதால் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 2,5-ம்  இடங்களுக்கு அதிபதியான புதன் சூரியனோடு இணைந்து சிம்மத்தில் இருப்பதால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கல்வியில் இருந்து வந்த தடை அகலும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். சொத்து பிரச்சனைக்கான பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். வீடு, மனை, புதிய வாகனம் வாங்குவதற்கு எதிர்பார்த்து கொண்டு இருந்த தொகை கைக்கு வரக்கூடும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமாக இருக்க போகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment