ரிஷபம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

புரட்டாசி மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு மிகவும் அனுகூலமான மாதமாக இருக்கும். செவ்வாய் பகவான், குரு பகவான் இருவரும் 7 ஆம் இடத்தினைப் பார்ப்பதால் கணவன் – மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

தொழில் செய்வோர் அபிவிருத்தி செய்வதற்கும், புதிய தொழில் துவங்குவதற்கும் ஏற்ற காலகட்டமாகும். லாபம் கொட்டும். நண்பர்கள்மூலம் பண உதவிகள் கிடைக்கப் பெறும்.

வாங்கிய கடன்களை அடைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். எடுக்கும் முயற்சிகள் 100% வெற்றியே கிடைக்கும். உடன் பிறப்புகளுடனான அன்பு அதிகரிக்கும்.

4 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழ்நிலைகள் கைகூடும். குல தெய்வத்தின் அனுகிரகம் முழுமையாகக் கிடைக்கப் பெறும், உடல் உபாதை ஓரளவு இருக்கும், அதனால் கவனத்துடன் இருப்பது நல்லது.

காதல் திருமணங்கள் கைகூடும் காலமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் இருக்கும் கேது பகவான் தடைகற்களை உடைத்து வெற்றிகளைக் கொடுப்பார். தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள்; சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும்.

வெளிநாடு, வெளியூர், வெளி மாநிலப் பயணங்கள் ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். தந்தை வழியால் உதவிகள் கிடைக்கப் பெறும். 10 வீட்டை சுக்கிரன், புதன் பார்வை இருப்பதால் அற்புதமான மாதமாக இருக்கும்.

தொடாத காரியங்களும் சேர்த்துத் துலங்கும் மாதம்; பிள்ளைகளால் பெருமிதம் அடைவீர்கள். தங்க நகைகளை வாங்குவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.