ரிஷபம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

ரிஷபம் ராசியினருக்கு பங்குனி மாதம் அரசு வகையில் ஆதாயம் கிட்டும். ரிஷபம் ராசியினருக்கு சூரியன், புதன் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு சாதகமான பலன்களை கொடுப்பார். மார்ச் 26தேதி முதல் உங்கள் ராசி அதிபதியான சுக்ரன் நற்பலன்களை கொடுப்பார். ஏப்ரல் 10-ம் தேதி குரு பகவான் வக்கிரம் பெற்று துலாம் ராசிக்கு வருவதால் அதன் பிறகு நன்மைகள் அவ்வளவாக நடைபெறாது.

பதினோராம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். பணம் புழக்கம் சீராக இருக்கும். அரசு வகையில் உங்களுக்கு ஆதாயம், நன்மைகள் கிட்டும்.

இந்த மாதத்தில் நீங்கள் திட்டமிட்டப்படி எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தேவைகள் பூர்த்தியாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வீண் குழப்பங்கள் வரக்கூடும்.

குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை நிலவும். உற்றார், உறவினர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மார்ச் 18, 19-ம் தேதி உறவினர் வருகையால் நன்மைகள் உண்டாகும். மார்ச் 28, 29 ல் அவர்களால் வீண் வம்புகள், கசப்பான சம்பவம் நடைபெற வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். ரிஷபம் ராசி பெண்கள் ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கடன் கிடைத்து தங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம் ராசி மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் ஆசிரியரின் அறிவுரை கேட்டு அதன் படி நடந்து வெற்றி காண்பார்கள். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும், தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வரக்கூடும். கல்விக்கு அதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ற படி நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றங்கள் காண்பார்கள். ஒரு சிலருக்கு லாபங்கள் பன்மடங்கு வருவதால் புதிய கிளைகள் அமைக்கும் சூழல் உருவாகும்.

கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் செலவுகள் ஏற்படக்கூடும். ஏப்ரல் 2, 3 தேதி உங்களுக்கு எதிர்பாராத வருமானம் வரக்கூடும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் கிடைக்கும். மார்ச் 20-ம் தேதி முதல் 25 தேதி வரை செய்யும் காரியங்களில் தடை, எதிரிகள் தொல்லை வரக்கூடும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள்.

விண்ணப்பித்த கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நல்ல முறையில் நிறைவேறும். அரசு ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் மற்றும் வியபாரம் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். சனிக்கிழமையன்று பெருமாள் கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து மனதார பிராத்தனை செய்தால் உங்கள் பிரச்சனைகள் யாவும் தீரும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment