ரிஷபம் மே மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 12 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மாற்றங்கள் செய்ய நினைத்தால் நீங்கள் தயங்காமல் செய்யலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நீங்கள் நினைத்த விஷயங்கள் கைகூடும்.

தொழில்ரீதியாக நீங்கள் புதுத் தொழிலும் துவங்கலாம்; அபிவிருத்தி செய்யும் முயற்சியிலும் ஈடுபடலாம். பொருளாதாரரீதியாக பெரிய அளவில் விரயச் செலவுகள் ஏற்படும். முடிந்தளவு கையில் இருக்கும் பணத்தினைக் கொண்டு கடனை அடைத்துவிடுங்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமண முயற்சிகளில் தடங்கல்கள், குழப்பங்கள் ஏற்படும். அதனால் தற்போதைக்கு திருமண காரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது வீட்டில் பெரும் எதிர்ப்பு நிலவும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கடன் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. அதிலும் உறவுகளுக்குள் கடன் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டால் உறவில் பிளவு ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்வி ரீதியாக பெரிய அளவில் குழப்ப மனநிலையுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை இதுவரை இருந்துவந்த பாதிப்புகள் சரியாகும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை அலைச்சல்கள் அதிக அளவில் இருக்கும், உறவினர்கள் வருகை, வெளியூர்ப் பயணம் என கடும் வேலைப் பளுவுடன் இருப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews