ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை சுக்கிரன் உச்சம் அடைந்து காணப்படுகிறார். புதிதாக எந்தவொரு முயற்சியினையும் தயங்காமல் செய்யலாம். சுக்கிரன்- ராகு பகவானுடன் இணைவதால் சில எதிர்மறையான விஷயங்கள் நடைபெறும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது, பொருளாதார ரீதியாக பண வரவு சிறப்பாக இருக்கும், வீடு, மனை வாங்குதல், புதிதாக சேமிப்பினைத் துவக்குதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.

வியாபாரம்ரீதியாக நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள். பழைய கடன்களை அடைத்து கடன் தொல்லையில் இருந்து முழுவதும் மீண்டு வருவீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் பிளவு ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நலனில் சிறப்பாகச் செயல்படுவர். எதிர்காலம் சார்ந்த திட்டங்களைச் சிறப்பாகத் தீட்டுங்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த எதிர்காலம் சார்ந்த விஷயங்களுக்குத் திட்டமிடுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews