ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2023!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை ஏற்கனவே திட்டமிட்டு இருந்த காரியங்களை இந்தக் காலங்களில் நடத்திக் கொள்ளலாம்; ஆனால் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கும் முயற்சிக்கும்  முடிவுகளைத் தள்ளிவைத்துவிட்டு இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. வேலைப் பளு அதிகரித்துக் காணப்படும். தொழில்ரீதியாக அதிக அளவில் அலைச்சல்கள் இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை குரு பலன் இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த வரன் கைகூடும்; ஆனால் தடைகள், தாமதங்கள் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் தற்போதைக்குத் திருமண தேதியைக் குறிக்க வேண்டாம்.

புதன் பகவான் பொருளாதாரரீதியாக ஏற்றத்தினைக் கொடுப்பார். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவில் உடல் குறைபாடுகள் இருக்காது.

இருப்பினும் சிறு சிறு உடல் தொந்தரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை உயர் கல்வி சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்; ஏற்கனவே இருந்த மனக் கசப்புகள் சரியாகும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன நிம்மதியுடன் இருப்பர்; தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவர்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews