ரிஷபம் ஆவணி மாத ராசி பலன் 2022!

தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் வாக்குவாதங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். உத்தியோக நிமித்தமாக எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்புமுனையினைக் கொடுக்கும் முடிவாக அமையும்.

நீண்ட நாட்களுக்குப் பின் ஆவணி மாதத்தில் நன்மைகள், அனுகூலங்கள் போன்றவை உங்கள் வாழ்வில் நடக்கப் பெறும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த சுபகாரியம் சார்ந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த பாரங்கள் குறையும்.

தொழில் அபிவிருத்திக்கான காலகட்டமாக இது இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும் மாதமாக இருக்கும். வெளியூர்ப் பயணங்கள், உள்ளூர்ப் பயணங்கள் என ஆதாயம் தரும் விஷயங்களுக்காக பயணம் செய்வீர்கள்.

பூர்விக வழிச் சொத்துகளால் சிறு சிறு பிரச்சினைகள் வரும். நிதானமாகச் செயல்பட்டால் மட்டுமே பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த சுபகாரியத்தில் கைகூடும் காலமாக இருக்கும்.

குழந்தைகள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவார்கள். பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.