ரிஷபம் ஆவணி மாத ராசி பலன் 2018!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் நல்லவை நடைபெறும். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் மூத்தவர்களின் ஆதரவு கிட்டும். மனதில் புதிய உற்சாகம், தெளிவு பிறக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். தொழிலில் லாபம் பெருகும். ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உங்கள் மனதில் சோர்வு தோன்றக்கூடும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.

பெரிய முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை சிந்தித்த பிறகு செயலில் ஈடுபடுங்கள். வீட்டில் அனுபவமிக்க நபர்களிடம் கலந்து பேசி முடிவெடுங்கள். ராகு பகவானால் மாதம் முழுவதம் நன்மை நடைபெறக்கூடும். ஒரு சிலருக்கு வேலை அல்லது வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும். மனதில் ஒரு வித தளர்ச்சி, வீண் பயம், தேவையில்லாத சிந்தனை தோன்றக்கூடும்.

குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் விழுவதால் வருகின்ற இடையூர்களை எதிர்க்கும் ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ரிஷப ராசியினருக்கு இப்பொழுது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலமாக இருக்கப் போகின்றது. அஷ்டம சனியின் ஆதிக்கம் தொடர்வதால் இளம் வயதில் இருக்கும் ரிஷபம் ராசியினர் கடுமையாக உழைக்க வேண்டி வரக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். மொத்தத்தில் ரிஷபம் ராசியினருக்கு மாற்றங்கள் நிகழ கூடிய மாதம் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையாக செயல் பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment