ரிஷபம் ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

ரிஷப ராசி அன்பர்களே! கடின உழைப்பிற்கு உண்டான ஆதாயப் பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். பொருளாதாரரீதியாக சிறப்பான முன்னேற்றம் இருக்கும்; திடீர் யோகம் ஏற்படும் மாதமாக ஆடி மாதம் இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வீடு, மனை வாங்க பல ஆண்டுகளாக ஆசை கொண்டு இருந்தோரின் கனவு இனி நனவாகும். பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கிப் பயணிப்பீர்கள்.

பூமி வாங்கும் விஷயம் ரீதியாக அட்வான்ஸ் கொடுப்பீர்கள்; தங்க நகைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூர்விகச் சொத்துகள் சார்ந்த பிரச்சினைகள் சமாதானத்திற்கு வரும்.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் கவனம் செலுத்துவர். மேலும் குழந்தைகளின் கல்விரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கும் சிறப்பான வேலை கிடைக்கப் பெறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் பணம் சார்ந்த முதலீடுகள் செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews