ரிஷபம் ஆடி மாத ராசி பலன் 2022!

புதன் சூரியன் இணைவு உங்கள் வளர்ச்சிக்கு உதவும் மாதமாக ஆடி மாதம் இருக்கும். ஆடி மாத துவக்கம் கேது ஆறாம் இடத்தில் இருப்பதால் மந்தநிலையில் இருக்கும்.

அதன்பின்னர் இதுவரை அடைந்த தோல்விகளில் இருந்து மீண்டு வருவீர்கள். தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்ய நினைப்போர் ஓரளவு லாபகரமான நிலையினை அடைவீர்கள்.

இதுவரை இருந்த கடன் தொல்லையில் சிறு கடன்களை கட்டி மீள்வீர்கள். வேலைக்குப் புதிதாக முயற்சிப்பவர்களுக்கும் சரி பதவி உயர்வு எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கும் சரி நல்ல செய்தி வந்து சேரும்.

பெண்களுக்கு வீட்டில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும், வேலைக்கு முயற்சிப்போருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வீட்டில் பேசும்போது கவனமாக பேசுதல் வேண்டும்; இல்லையேல் மிகப் பெரும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். நண்பர்களிடமோ குடும்பத்தினரிடமோ மனம்விட்டுப் பேசினால் உங்களது மன உளைச்சல் குறையும்.

உடல் நலம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனமாக இருத்தல் வேண்டும். மருத்துவ ரீதியான விரய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கல்வி சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் சிறப்பான பலன் கிடைக்கும். ஜாமீன் யாருக்கும் போடாமல் தவிர்த்தல் நல்லது. இரவு நேரப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews