Connect with us

ரிஷபம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

ரிஷபம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் பொருளாதாரம் உயர்கின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருப்பதால் துணிவாக செயல்படுவீர்கள். மன குழப்பங்கள் அகன்று தெளிவான சிந்தனைகள் பிறக்கும்.

இதுவரை சனி பகவான் எட்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான கஷ்டங்களும், இடையூறுகளும் கொடுத்து வந்தார். இனி சனி பகவான் வக்ரம் பெற்று வலிமை இழப்பதால் ஆரோக்கியம் சீராகும், தடைபட்ட காரியம் நல்ல விதமாக முடிவடையும். திருமண பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடிவடையும். செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் சரியான நேரத்தில் கைக்கூடும்.

கிரகங்கள் சூரியன், ராகு, சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் அதிகளவில் நன்மை நடைபெறும். இல்லத்தில் இதுவரை இருந்து வந்த மன  குழப்பங்கள் நீங்கி  பிரச்சனைகள் தீரும். இனி வருகின்ற மாதங்களில் ரிஷபம் ராசியினருக்கு நல்ல ஏற்றமான காலமாக இருக்கும். பகைவர்கள் சதி  உங்களிடம் எடுபடாது. அவர்கள் உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும். அலுவலகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும். பொருளாதாரம் மேம்படும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி, சம்பள உயர்வு கூடிய புதிய வேலை அமையக்கூடும். கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது சிறிது முயற்சி செய்தாலும் நல்ல விதமாக முடிவடையும்.

வீட்டிற்கு தேவையான வசதிகள் பூர்த்தியாகும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அக்கம் பக்கத்தினரிடம் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கும் பொழுது உங்களுக்கு பெரியவர்களின் ஆசி கிட்டும். மூத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும். நிரந்தரமான சேமிப்பு  கணக்கில் முதலீடு செய்வது நல்லது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top