பாலாஜிக்கு திடீரென ஆதரவு கொடுக்கும் ரியோ-சோம்: ஆரியை வீழ்த்தவா?

b7a0d208d62c5bf849049f3c8272309e

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அன்பு குரூப் மற்றும் பாலாஜி குரூப் ஆகிய இரண்டு குரூப்புகள் இருந்த நிலையில் தற்போதைய நிலையில் ஆரி மற்றும் ஆரி இல்லாத குரூப் என்று இரண்டு குரூப் ஆக மாறிவிட்டது போல் தெரிகிறது 

ஆரியின் மதிப்பை உறவினர் வருகையின் போது அனைத்து போட்டியாளர்களும் புரிந்து கொண்டு தற்போது ஆரியை மட்டுமே குறிவைத்து வருகிறார்கள் என்பதும் ஆனால் சளைக்காமல் அனைவருக்கும் சவாலாக இருந்து வருகிறார் ஆரி என்பதும் குறிப்பிடத்தக்கது 

ba8c48369af6c37d9bef53d751d39f06

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில் சோம் மற்றும் ரியோ ஆகிய இருவரும் ஆரி குறித்து பேசுகின்றனர். பாலாஜி பாவம் என்றும், அவனை அனைவரும் ஏற்றிவிடுகிறார்கள் என்றும், பாலாஜி பழைய மாதிரி இல்லையே என ஏத்தி விடுவதால் பாலாஜி தற்போது கோபப்படுகிறார் என்றும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பாலாஜி கோபப்படுகிறார் என்றும் சோம் கூறுகிறார் 

அதனை ஒப்புக் கொண்ட ரியோ, பாலாஜி, பாதிக்கு மேல் தான் கேமிலேயே வந்துள்ளார் என்று கூறுகிறார். சோம் அப்போது ’பாலாஜி சண்டை போட்டதை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் அவர் நன்றாகத்தான் விளையாடி உள்ளார் என்று கூற ரியோவும் அதற்கு ஒப்புக் கொள்கிறார் 

மொத்தத்தில் ஆரியை வீழ்த்துவதற்காக திடீரென பாலாஜிக்கு ரியோ மற்றும் சோம் ஆதரவு கொடுத்து வருவது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் ஆரியை எத்தனை பேர் சேர்ந்தாலும் அசைக்க முடியாது என்பதுதான் அவரது ஆர்மியினர்களின் கருத்தாக உள்ளது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.