பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரியோ போட்ட முதல் பதிவு!

5188d6d7b183589a94b379f2098aa2b6

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.

அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாம் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறினார் ரியோ. 

அவரது ரசிகர்களும் விஜய் டிவி பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரியோவின் குடும்பத்தினரும் அவருக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து ஏகோபித்த வரவேற்பு அளித்து வரவேற்றுள்ளனர். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ரியோ முதல்முறையாக தனது ரசிகர்களுக்கு ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது “எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா. நான் இப்பொழுது நலமாக இருக்கிறேன். 

பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான பயணம். நான் வெளியில் வந்து பார்த்த பொழுது நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்திருந்த ஆதரவு, அதாவது போட்டோக்கள் வீடியோக்களை பார்த்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. 

அடுத்த நிறைய வேலை இருக்கிறது. அதை ஒவ்வொன்றையும் பிளான் செய்து செய்வோம். எப்போது இந்த அனைத்து பாசிட்டிவிட்டிக்கும் அன்புக்கும் முதலில் நன்றி செலுத்துகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.