அனிதாவிடம் வசமாக சிக்கிய ரியோ: பரபரப்பு வீடியோ

75a25328a78ffd4d09d8bd1b93da6745

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று அனிதா மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. மோசமான போட்டியாளர் என்று அனிதாவுக்கு ரியோ கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ளாத அனிதா அவருடன் வாதம் செய்தார் 

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் அந்த வாதம் தொடர்கிறது. கேப்டன்ஷிப் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நான் சுவராஸ்யமான போட்டியாளர் இல்லையாம், முயற்சி செய்த நிஷா சுவராஸ்யமான போட்டியாளரா? என்று அனிதா கேள்வி எழுப்புகிறார் 

இந்த கேள்வியால் வசமாக சிக்கிய ரியோ, ‘நான் கேப்டன்ஷிப் டாஸ்க் பற்றிக் கூறவில்லை என்று ரியோ கூற, அதற்கு அனிதா மோசமான போட்டியாளரை தேர்வு செய்வது என்பது அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை வைத்து தான் என்று கூறுகிறார்

இதற்கு பதில் சொல்ல முடியாத ரியோ உடனே தேங்க்யூ என்று கூறி விட்டு நைசாக நழுவப் பார்க்கிறார். ஆனால் அனிதா விடாமல் இவ்வாறு ஒரு சரியான பாயிண்டை எடுத்து வைக்கும் போதெல்லாம் நழுவிப் போய்விடுறார், அதுதான் ரியோ என்று கூற மீண்டும் உசுப்பேற்ற பட்ட ரியோ அனிதாவிடம் வாக்குவாதம் செய்கிறார் 

இந்த வாக்குவாதத்தை பாலாஜி, ஷிவானி உள்பட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனாவின் லவ் பேர்ட்ஸ் குரூப்பிற்கு சரியான சிம்மசொப்பனமாக தனி ஒரு ஆளாக நின்று போராடி வரும் அனிதாவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment