தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அந்த உரிமையை மக்களுக்கு அளித்துள்ள நிலையில் அந்த உரிமையை பறிக்கும் வகையில் மத்திய பாஜக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது
ஆந்திரா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மாநிலங்களாக உள்ளன என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.